அண்ணாமலை ஆவேசம்
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயலிழந்து விட்டது. குற்றங்கள் அதிகரிப்பதால், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய போலீசார் மறுக்கின்றனர். இது கண்டனத்திற்குரியது. இதனை கண்டித்து மகளிர் அணியினர், நாளை (ஜன.,3ம் தேதி) மதுரையில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்கு மதுரை போலீசார் அனுமதி வழங்கவில்லை என்றாலும் திட்டமிட்டபடி இந்த பேரணி நடக்கும் என ப.ஜ.க தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் தெரிவித்தார்.