பத்திரிகையாளர்களுக்கு சலுகை
பத்திரிகையாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 24 மணி நேரம் கூட முடிவடையாத நிலையில், பத்திரிகையாளர்கள் நலனுக்கான ஒரு முக்கியமான அரசாணை வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர்கள் குடும்ப உதவித்தொகையை உயர்த்தி உள்ளது தமிழக அரசு.
பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- (ரூபாய் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயாணல் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.