உசிலம்பட்டி அருகே நேற்று இரவு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை தாக்க முயற்சித்துள்ளார். உடன் வந்த அதிமுக நிர்வாக தினேஷ்குமார் மீது நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அமமுக நிர்வாகிகள் என கூறப்படும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பேரையூர் டிஎஸ்பி சித்ரா தேவி தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
