ஜார்கண்ட் முதல்வரின் தனி செயலாளர் வீட்டில் ரெய்டு
ஜார்கண்ட்டில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரனின் தனிச் செயலாளர் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ேஹமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. சட்டவிரோத சுரங்க வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.