டெல்லியில் காற்று மாசு மிக மோசமன நிலையை எட்டியுள்ளது

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமன நிலையை எட்டியுள்ளது. காற்றின் தரம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு அரசு தடை விதித்தது. இதன்படி டெல்லியில் பட்டாசு விற்பனை செய்யவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது என டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் தீபாவளி பண்டிகை அன்று டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருந்தது.

இந்நிலையில் பட்டாசுகளுக்கு தடை என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை என ஊடகங்களில் செய்தி பரவியது. இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கில், டெல்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை நீதிபதி கேள்வி எழுப்பியதுடன் டெல்லியில் காற்று மாசு குறித்தும் கவலை தெரிவித்துள்ளார். தடையை ஏன் திறம்பட அமல்படுத்தவில்லை என்பதை ஒரு வாரத்தில் தெளிவுபடுத்துமாறு டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.