அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசால் கையகப்படுத்த முடியாது
அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்
தனியாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசால் கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குடிமக்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் பொது நலனுக்காக கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு இல்லை என்று இன்று வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 8-1 என்ற பெரும்பான்மையுடன் தீர்ப்பை வழங்கியுள்ளது.