கந்த சஷ்டி விழா தொடங்கியது.
முருகனின் அறுபடை வீடுகளில், 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விழாவில் பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர்.
அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
6 நாட்கள் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.