முத்ரா பற்றிய முத்தான அறிவிப்பு! கடன் வரம்பு இப்போ ரூ.20 லட்சம்.
முத்ரா பற்றிய முத்தான அறிவிப்பு! கடன் வரம்பு இப்போ ரூ.20 லட்சம்.
முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
நாட்டில் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் முத்ரா திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. முத்ரா ஒரு மறு நிதியளிப்பு நிறுவனம்.
எனவே, நேரடியாக கடன் வழங்க முடியாமல் வங்கிகள், கடன் தரும் பிறநிறுவனங்கள் மூலமாக சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் நிதியை முத்ரா தருகிறது.
இந் நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முத்ரா கடன் வரம்பு உயர்த்தப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அவரது அறிவிப்பின்படி, முத்ரா திட்ட கடன் வரம்பு ரூ.10லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த கடன் வரம்பு உயர்வானது, நிதி பெறாதவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும். எதிர்கால தொழில்முனைவோருக்கு உதவும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடன் வரம்பு உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், இதற்காகவே தருண் பிளஸ் என்ற புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன்பெறவும், முந்தைய கடனை சரியாக திருப்பி அளித்தவர்களும் இந்த பிரிவுக்கு தகுதியானவர்கள்