தமிழ்நாட்டில் முதல்முறையாக திண்டியூர் ஊராட்சியில் சகல வசதிகளுடன் கூடிய நியாய விலை கடை திறப்பு.

தமிழ்நாட்டில் முதல்முறையாக திண்டியூர் ஊராட்சியில் சகல வசதிகளுடன் கூடிய நியாய விலை கடை திறப்பு.

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பழைய ரேஷன் கடை கட்டடம் சேதம் அடைந்ததால், புதிய கட்டடம் கட்டித்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்து 4 மாதங்களுக்கு முன் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பரிந்துரைத்ததன் பேரில் சுமார் ₹9.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் தனது சொந்த பணம் ₹7 லட்சத்தை செலவழித்து நவீன நியாய விலை கடையை கட்டியுள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சந்திரசேகர். கழிவறை, சிறிய ஃபவுண்டைன், மொபைல் சார்ஜ் செய்யும் வசதி, ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் இளைப்பாற திண்ணை போன்ற அமைப்பு என சகல வசதிகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.