சென்னை தினசரி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது.
சென்னை தினசரி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது.
இன்னும் இரண்டு மாதங்களில் ஏசி ரயில் பெட்டிகள் கொண்ட லோக்கல் ரயில் சேவை வர இருக்கிறது. அரக்கோணம், செங்கல்பட்டு செல்லும் வழித்தடங்களில் ஏதேனும் ஒரு வழித்தடத்தில் இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இருப்பினும் எந்த வழித்தடம் என்பதை EMU சென்னை நிர்வாகம் அறிவிக்கவில்லை. ஆனால் இப்போதே எங்கள் வழித்தடத்தில் தான் முதல் ஏசி ரயில் சேவையை தொடங்க வேண்டும் என செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் ஏசி ரயில் : சென்னை லோக்கல் ரயிலில் மட்டும் தினசரி 11 லட்சம் மக்கள் பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கை உண்மையான பயணிகளின் எண்ணிக்கையை விட சற்று குறைவாக தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது. சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை -வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் லோக்கல் ரயில் ஸ்டேஷன் – அரக்கோணம், சென்னை கடற்கரை டூ கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் லோக்கல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் அரக்கோணம் மற்றும் தாம்பரம் ரயில் மார்க்கங்கள் எப்போதும் மக்கள் கூட்டம் மிகுந்தவையாக இருக்கின்றன. இந்த வழித்தடங்களில் ஏசி ரயில் சேவை இயக்க வேண்டும் என மக்களிடையே நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.