தினமும் ஊழியர்களுக்கு ராஜவிருந்து கொடுக்கும் கூகுள்..

கூகுள் நிறுவனத்தில் இலவச உணவு வழங்குவதால் ஊழியர்களின் படைப்பாற்றல் மேம்படுவதற்காக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு கூப்பன்கள் குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளது. கூகுள் சிஇஓ-வும் தமிழருமான சுந்தர் பிச்சை உணவு கூப்பன் வழங்குவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில்; ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்க கூகுள் ஏன் அதிகளவிலான பணத்தை செலவிடுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இது ஒரு நிதிச்சுமை அல்ல என்றும், இதன் மூலம் நிறுவனம் பெறும் லாபம் அடையும் என்று குறிப்பிட்டார். 2004ம் ஆண்டு மேலாளராக கூகுளில் தான் சேர்ந்த போது சக ஊழியர்களுடன் சேர்ந்து இலவச உணவு உண்ணும் நேரத்தில் தான் மிக சிறந்த யோசனைகள் உதித்தாகவும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டார். உலகம் முழுவதும் கிளை பரப்பியுள்ள கூகுள் நிறுவனத்தில் 1 லட்சத்து 82 ஆயிரம் பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.