குஜராத்தின் காந்திநகரில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, நூற்றுக்கணக்கான நிலத் தகராறு வழக்குகளில் ‘தீர்ப்புகளை’ வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கைது செய்யப்பட்டார். குஜராத்தில் போலி அரசு அலுவலகம், போலி சுங்கச்சாவடியைத் தொடர்ந்து போலி நீதிமன்றம் செயல்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
