மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் சரிந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் சரிந்து 81,151 புள்ளிகளானது. 545 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய சென்செக்ஸ், சிறிது நேரத்தில் 413 புள்ளிகள் சரிந்து பின் மீண்டது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் சரிந்து 24,781 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது