எந்திரத்தில் கால் சிக்கி தலைகீழாக தொங்கிய தொழிலாளி

கேரள மாநிலம் வயநாட்டில் ஓலை வெட்டுவதற்காக 40 அடி உயர தென்னை மரத்தில் ஏறியபோது எந்திரத்தில் கால் சிக்கி நீண்ட நேரம் தலைகீழாக தொங்கிய தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்டனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி அருகே பழூர் பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் (41). தென்னை மரம் ஏறும் தொழிலாளி ஆவார். நேற்று அங்குள்ள ஒரு 40 அடி உயர தென்னையில் ஓலை வெட்டுவதற்காக எந்திரத்தின் உதவியுடன் ஏறினார். எந்திரத்தில் நின்றபடி ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது இடது கால் எந்திரத்திற்குள் சிக்கியது.

Leave a Reply

Your email address will not be published.