ஆன்மீக செய்தியில்…….தெய்வத்தின் பார்வையில் நேரங்கள்..
அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே
எதுநல்லநேரம் ?
நல்லதை நினைக்கும் போது…நல்லதை பார்க்கும் போது…
நல்லதை கேட்கும் போது…
நல்லதை பேசும் போது…
இனிய ஈசனை நினைக்கும் போது மிகவும் நல்ல நேரம்
எதுஇராகுகாலம் ?
அகங்காரம் கொள்ளும் நேரம்….
பாசம் கண்களை மறைக்கும் நேரம்….
ஆசைகள் எல்லையை மீறும் நேரம்….
கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்….
தேகம் கவர்ச்சிக்கும், கவர்ச்சியில் மூழ்கும் நேரம்…
எது_குளிகை ?
கவலைப்படும் நேரம்….
பயப்படும் நேரம்….
கலங்கும் நேரம்…
முயலாத நேரம்….
எதுஎமகண்டம் ?_
பொறாமைப்படும் நேரம்…..
புறம் கூறும் நேரம….
கோள்சொல்லும் நேரம்….
சதி செய்யும் நேரம்…
எது_பிரம்மமுகூர்த்தம் ?
தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்….
கடமையில் வழுவாத நேரம்….
அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்….
எதுசுபமுகூர்த்தம் ?
சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்…
சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்….
சிவாய நம சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. சிவனே சரணாகதி . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி
உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்
அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி ஷிவானி கௌரி