இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டி

இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டி கொண்டடெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்தபோட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: “பேட்டிங்கில் எங்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது. அதே நிலைமையை பந்து வீச்சில் உருவாக்க விரும்புகிறோம். சில தனிநபர்களை அதிகமாக சார்ந்திருக்க விரும்பவில்லை. அது சரியான விஷயமும் அல்ல. வருங்காலத்தை பார்த்து அதற்குத் தகுந்த வீரர்களை உருவாக்குவது அவசியம். எனவே ஒரு வேகப்பந்து வீச்சாளாருக்கு பதிலாக மற்றொருவர் தயாராக இருப்பதாக நாங்கள் உணர்ந்தால் அந்த வீரர் களமிறங்க தயாராகி இருக்க வேண்டும். நமது வீரர்கள் துலீப், இரானி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளனர். எனவே அவர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

கொடுக்கப்பட்ட குறுகிய வாய்ப்பில் சில வீரர்கள் அசத்தியுள்ளனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்கிறார்களா என்பதை நாங்கள் பார்ப்போம். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு பார்ப்போம். ஏனெனில் அது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விட வித்தியாசமானது. நிதிஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் திறமையானவர்கள். எனவே அவர்களை இந்திய அணியில் வைத்து பார்ப்பது நல்லது. இதுவே இந்திய கிரிக்கெட்டை வளப்படுத்தும். முகமது ஷமி மீண்டும் காயம் அடைந்துள்ளார். அவர்விரைவில் உடற்தகுதியை பெற பிரார்த்திக்கிறேன், என்றார்.

மாயாஜாலமான உணர்வு
சொந்த மைதானத்தில் டெஸ்ட்டில் ஆட உள்ளது குறித்து கே.எல்.ராகுல் கூறியதாவது: சொந்த மைதானத்திற்கும், வளரும் பருவத்தில் கிரிக்கெட் விளையாடிய இடத்திற்கும் திரும்புவது என்பது எப்போதும் சிறப்பு வாய்ந்த ஒன்று. நான் 11 வயதில் முதன்முதலாக இங்கு விளையாட ஆரம்பித்தேன். எனக்கு தற்போது 32 வயதாக இருக்கும் நிலையில் விஷயங்கள் மாறி உள்ளது. ஆனால் இப்போதும் இங்கு முதல் முறையாக விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மைதானத்தின் நடுப்பகுதிக்கு செல்லும் போது பல உணர்வுகள் பாய்கின்றன. உள்ளே சென்ற 2 நிமிடங்களில் நான் ஆடியபோட்டிகளின் 3 மணி நேர படம் தலையில் ஏற்பட்டது போன்ற உணர்வு உண்டானது. இவற்றை நினைக்கும்போது ஒரு உணர்ச்சிமயமான தருணம் ஏற்படுகிறது. இது ஒரு மாயாஜாலமான உணர்வு, என்றார்

Leave a Reply

Your email address will not be published.