பாராளுமன்ற தேர்தலில் தமிழ்பெண்!
இலங்கையில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
குறிப்பாக தமிழர் பகுதியில் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி இருக்கிறது.
இந்த நிலையில் சுயேட்சைக் குழு 6 இல் அகில இலங்கை தமிழ் கொடி AITK சார்பில் முதன்மை வேட்ப்பாளராக பெண் ஒருவர் களம் இறங்கியிருக்கிறார்..
அவர்தான் ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் டிவனியா.
யார் இவர்? இவருக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? என்ற பல விமர்சனங்கள் யாருக்கும் இல்லாத வகையில் எழுந்து கொண்டிருக்கிறது.
ஈழத்தில் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கை தமிழ் கொடி.
அதை அவதானித்த நாங்கள் யார் இவர் என்று தேடிப்பார்த்தோம்.
இவர் 1986 9 24 அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.
தாய் விக்ரர் கிருஷ்ணவேணி(சாந்தி)
தந்தை
எஸ் விக்ரர் mann.
அண்ணா லெப் முதல்வன் (மாவீரர்)
(டலஸ் சுஜேந்திரன் mann )
தங்கை ஒருவரும் இறந்து விட்டார்…
குடும்பத்தில் சகோதர்களோடு பிறந்தாலும் அவர்களை இழந்து தனி ஒரு பிள்ளையாக இருக்கின்றார்..
இவர் கிளி செந்திரேசா மகளீர்கல்லூரி கிளிநொச்சி மகா வித்தியாலயம் கிளி பற்றிமா ரோமன் கத்தோலிக்க பாடசாலைகளில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகதின் முகாமைத்துவ பட்டதாரியுமாவார்.
இதே வேளை 1996 இல் இருந்து கிளிநொச்சி மாவட்டத்தின் நீண்ட தூர ஓட்ட வீராங்கனையும் ஆவார்.
இலங்கை தேசியம் வரை சென்று இரண்டு ஜனாதிபதி விருதுகளைப் பெற்ற சாதனைப் பெண் ஆவார்.
டிவனியாவின் பத்து வயதில் புலிகளின் தலைவருக்கு டிவணியா கடிதம் எழுதினார். அதற்கு பதில் கடிதமும் தனது 36 புகைப்படங்கள் அடங்கிய அல்பமும் அனுப்பிவைத்தார் புலிகளின் தலைவர்.
இவருடைய சாதனையை பாராட்டி புலிகளின் தலைவர் வன்னிப் பெரு நிலத்தின் நம்பிக்கை நட்ச்சத்திரம் என்ற பட்டத்தை வழங்கி
கெளரவித்தார்..
இலங்கை ஜனாதிபதி விருதும் புலிகளின் தலைவரின் விருதும் பெற்ற ஒரே ஒரு சாதனையாளர் ஆவார்.
இவர் கிளிநொச்சி மாவட்டத்தை உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்
வீ ஆனந்தசங்கரி மற்றும் தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் அவர்களுடைய பேத்தியும் ஆவார்..
இவருடைய அம்மப்பா அமரர் சுப்பையா பொன்னையா அந்த காலத்தில் பாடசாலை கூட்டுறவு சங்கம் என நிலங்களை அன்பளிப்பு செய்த கொடை வள்ளல் ஆவார்.
இவருடைய அப்பப்பா சீவரத்தினம் mann இரணை மடு குளத்தின் முதலாவது ஓவசியர் ஆவார்.
இவர் யாழ்ப்பாணம் mann ஸ்கூல் மற்றும் நூற்றாண்டு கண்ட உடுவில் பெண்கள் கல்லூரியின் ஸ்தபாகரின் மகன் ஆவார்.
இன்றும் இவர்கள் பரம்பரையின் mann ஸ்கூல் நடாத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு பல வரலாற்று பின்னணியை கொண்ட இவர் தன் சொந்த அடையாளங்களை வெளிப்படுத்தாது ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் அடையாளமாக மக்களால் அதிகம் அறியப்படுகிறார்..
இவர் 17 மாத காலம் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் சிறை வாசமும் அனுபவித்தார்.
ஒரு பெண்ணாக இத்தனை வலிகளை கடந்து சாதிக்கும் டிவனியா வெற்றி பெற நாமும் வாழ்த்துகிறோம்.