ஒன்றிய இரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: செல்வப்பெருந்தகை

இரயில்வே விபத்துகளுக்கும், உயிர் இழப்புகளுக்கும், பாதிக்கபப்ட்டவர்களுக்கும் பொறுப்பேற்று ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு அருகில் கவரப்பேட்டையில் பாக்மதி விரைவு இரயில் நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு இரயில் பெட்டிகள் சிதறி கிடக்கின்ற கோர நிகழ்வு நடந்துள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக மெயின் லைனில் போக வேண்டிய விரைவு இரயில் லூப் லைனில் சென்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் பின்புறத்தில் மோதி இரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.