2024ல் விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தொழிலக பாதுகாப்பு இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 2024இல் தமிழகத்தில் 17 பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. நடப்பாண்டில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு தொழிற்சாலைகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் சென்னை தொழிலக பாதுகாப்பு இயக்குநர் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
