மெரினா நீச்சல் குளத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.1.37 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 5 மாதத்திற்கு பிறகு நீச்சல் குளம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.