வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரீபியன் பிரிமீயர் லீக்
வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று அதிகாலை நடந்த இறுதி போட்டியில் கயானா மற்றும் செயின்ட் லூசியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய கயானா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. லூசியா அணி தரப்பில் நூர் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய லூசியா அணி 10 ஓவரில் 51 ரன்கள் மட்டுமே எடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் கயானா அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் களத்தில் இருந்த ஜோன்ஸ் மற்றும் சேஸ் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இருவரும் சேர்ந்து மொயீன் அலி வீசிய 16வது ஓவரில் 27 ரன்களும், பிரிடோரியஸ் வீசிய 17வது ஓவரில் ஜோன்ஸ் மட்டும் 20 ரன்கள் எடுக்க அந்த அணி 18.2 ஓவரிலேயே இலக்கை எட்டி கோப்பையை தட்டிச் சென்றது. சேஸ் ஆட்டநாயகன் விருதையும், நூர் அகமது தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினர்