பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் அமைந்துள்ள ஜின்னா சர்வதேச
பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் அமைந்துள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று நள்ளிரவு திடீரென குண்டு வெடித்ததில் இரண்டு சீன பிரஜைகள் உட்பட பலர் பலியாகினர். பலியான இரண்டு சீனர்களும், சிந்து மாகாணத்தில் நடைபெறும் மின் திட்டத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் ஆவர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, மேற்கண்ட மின் திட்டங்களை எதிர்த்தும், அத்திட்டத்தை செயல்படுத்தும் சீன நாட்டவர்கள் மீதும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸ் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘கராச்சியில் சீனப் பொறியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கான்வாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 2 சீன ெபாறியாளர்கள் பலியாகி உள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு பெண் அடங்குவர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜின்னா சர்வதேச விமான நிலையம் இன்று வழக்கம் போல் இயங்குகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது