கோவை பாப்பாநாயக்கன்பாளையம்

கோவை பாப்பாநாயக்கன்பாளையம் பொன்னி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). இவரது மனைவி சபரி (27). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, ஸ்ரீசபரியின் பெற்றோர் 100 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர். ஆனால், அதன்பின்பு கார்த்திகேயன் தனது மனைவியின் நிறத்தை காரணம் காட்டி அவமரியாதையாக பேசி வந்துள்ளார். மேலும் அவரிடம் விவாகரத்து கேட்டு டார்ச்சர் கொடுத்துள்ளார்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால், கார்த்திகேயன், அவரது பெற்றோர் தண்டபாணி, ராஜேஷ்வரி ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி ஸ்ரீசபரியை தாக்கி வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சபரி ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கார்த்திகேயன், தண்டபாணி, ராஜேஷ்வரி ஆகிய 3 பேரை கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.