இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடக்கும் டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடைசியாக அங்கு ஆடிய 2 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் இந்த முறை அதற்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ளது. இதுபற்றி இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி அளித்த பேட்டி: “ஆரம்பத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்களுக்கு மிகவும் தீவிரம் இருந்தது.
ஆனால் நாங்கள் தொடர்ந்து அவர்களது மண்ணில் வைத்து 2 டெஸ்ட் தொடர்களை வென்ற பிறகு போட்டி மரியாதைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. நாங்கள் டெஸ்ட் அணியாக எதையும் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் நாங்கள் ஆஸ்திரேலியா அணியை தொடர்ந்து இரண்டு முறை அவர்களது மண்ணில் வைத்து வென்ற காரணத்தினால், இது மரியாதை மிக்க ஒன்றாக மதிப்பு மிக்க ஒன்றாக மாறி இருக்கிறது” என்றார்