நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி
வீடுகள் / சொத்துகளில் உங்கள் பெயருக்கு பட்டா, சிட்டா, அடங்கல்.A ரிஜிஸ்டர்.சொத்து வரி, கட்டிடம் வரி ,தண்ணீர் வரி. காலி மனை வரி, நன்செய் .புன்செய் , நத்தம் போன்ற இடங்களில் இருக்கும் பதிவேடுகளில் உங்கள் பெயர் மாற்றம் . அல்லது குடும்ப தலைவர், தலைவி பெயர்களை மாற்றுவது மிகவும் அவசியம்
ஆதார் அட்டையை புதுபிக்கவும். மொபைல் எண் சேர்க்கவும்#
..!
வேலையை துவங்கியது
அஞ்சல் துறை!
இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை,
6 இலக்க எண் மட்டுமே..
மத்திய அரசின் அடுத்த அதிரடி..!
இந்தியாவை முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ள மத்திய அரசு மனிதர்களுக்கு ஆதார் எண்ணை வழங்கியதைப் போல்
வீடு மற்றும் அலுவலகங்களுக்கு டிஜிட்டல் எண் கொடுக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் இனி ஒவ்வொருவரின் வீட்டின் விலாசம் அகற்றப்பட்டு டிஜிட்டல் எண் பயன்படுத்தப்படும் அளவிற்கு இப்புதிய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தபால் துறை
தகவல் தொடர்பு துறையின் கீழ் இருக்கும் தபால் துறை, இந்தியாவில் இருக்கும் அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு
3 இலக்க பின்கோடை அடிப்படையாகக் கொண்டு
6 இலக்க ஆல்பாநியூமரிக் (ஆங்கில எழுத்துகள் உடன் எண்கள்) டிஜிட்டல் எண் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஈ-லொகேஷன்
கூகிள் மேப் வழங்குவதைப் போலத்
தபால் துறை நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்களான அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்குத்
தனித்தனியாக
ஈ-லொகேஷன்,
ஆதாவது மின்னணு முறையிலான இருப்பிட விலாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் என்ன லாபம்..?
இப்படி அனைத்து அசையா சொத்துக்களையும் மின்னணு முறையில் இணைப்பதன் மூலம் சொத்தின் விபரம், அதன் உரிமையாளர், சொத்து வரி அறிக்கைகள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பின் விபரங்கள் என அனைத்தையும் ஒற்றைத் தளத்தில் கொண்டுவர முடியும்.
பயன்பாடு
இந்த 6 இலக்க ஆல்பாநியூமரிக் எண்களை விலாசத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தும் அளவிற்கு இது உருமாறும்.
சொல்லப்போனால் இனி வரும் காலத்தில் விசிடிங் கார்டுகளில் விலாசத்திற்குப் பதிலாக இந்த 6 இலக்க எண் மட்டுமே இருக்கும்.
மேப் மை இந்தியா
இப்போது நீங்கள் ஒருவரின் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும் என்றால் மேப் மை இந்தியா தளத்தில் 6 இலக்க எண்-ஐ பதிவிட்டால் போதும் செல்லும் வழியைக் காட்டிவிடும்.
முதற்கட்டம்
இத்திட்டத்தை முதல் கட்டமாக டெல்லி மற்றும் நொய்டாவில்
2 பகுதிகள்
அதாவது 2 பின்கோடுகளுக்கு மட்டுமே டிஜிட்டல் டேக்-ஐ உருவாக்கப்பட்டு வருகிறது.
உதாரணம்:
இந்த டிஜிட்டல் டேக் ABD55F உங்கள் விலாசத்தை முழுமையாக வாங்கிக்கொண்டு சேமிப்பது மட்டும் அல்லாமல் பூமி அச்சுகூற்களையும் சேமித்து வைத்திருக்கும்.
மத்திய அரசு திட்டங்கள்
இத்தகைய முயற்சி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை
சரியான முறையில் நேரடியாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க
மிகப்பெரிய அளவில் உதவி செய்வது மட்டும் அல்லாமல்
பல பினாமி சொத்துகள், அரசு சொத்துக்களைக் கையகப்படுத்துவதைக் குறைக்க முடியும்.
எளிமையான முறை..
இந்தியா போன்ற நாடுகளில் நெருக்கமான வீடு மற்றும் அலுவலகங்களை விரைவாகக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று, அதனை எளிமைப்படுத்தும் ஒரு முயற்சிதான் தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் என்று மேப் மை இந்தியா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒப்புதல்
இத்திட்டத்தின் மாதிரி மற்றும் முழுவிபரங்களை
மேப் மை இந்தியா
மத்திய தபால் துறையிடம் விளக்கம் அளித்த பின்பு,
அதனை முழுமையாக ஆய்வு செய்த பின்பே
இத்திட்டத்திற்குத் தபால் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தச் சோதனை திட்டம் வெற்றியடைந்தால், மேப் மை இந்தியாவின் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும்