செய்தியும் காட்சியும்
தினம் ஒரு சிந்தனை
தெளிவான மனதை
கலங்க வைப்பது எளிது!
கலங்கிய மனதைத்
தெளிவாக்குவது மிகக் கடினம்…!!
வீட்டு வைத்தியம்
கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் உணவில் அடிக்கடி பச்சைப்பயிரைச் சேர்த்துக் கொண்டால் தேவையான ஊட்டச்சத்துகளை பெற முடியும்.
நாளும் ஒரு செய்தி
இந்திய அறிவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் ‘சர்.சி.வி.ராமன்’ ஆவார்.
சமையல் குறிப்பு
இட்டலியை உப்புமாவாக தாளிக்கும்போது, காய்கறிகளை பொடியாக நறுக்கி, வதக்கி சேர்த்துக்கொண்டால் சுவையாக இருக்கும்.
பொன்மொழி
நம்பினார் கெடுவதில்லை.
-நான்கு மறைத் தீர்ப்பு
இன்று அக்டோபர் 2-
▪️ காந்தி ஜெயந்தி.
▪️ உலக சைவ உணவாளர் நாள்.
▪️ அனைத்துலக வன்முறையற்ற நாள்.
பிறந்த நாள்
1869- மகாத்மா காந்தி (தேசத் தந்தை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்)
1904- லால்பகதூர் சாஸ்திரி (இந்தியாவின் 2-ஆவது பிரதமர்)
நினைவு நாள்
1975- காமராஜர் (சென்னை மாநிலத்தின் 3-ஆவது முதலமைச்சர்)
2014- பொள்ளாச்சி நா.மகாலிங்கம் (மக்கள் பணியாளர்)