திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திரா துணை முதலமைச்சர் பவண் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திருமலைக்கு பாதயாத்திரை செல்லவுள்ளதால் பாதுகாப்பு கருதி 30வது பிரிவு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் மாவட்டம் முழுவதும் கூட்டம், பேரணி ஆகியவை நடத்த தடை விதிக்க வழிவகை செய்கிறது. அக்டோபர் 24ம் தேதி வரை இச்சட்டம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.