திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொத்தக்குப்பத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. விஜயலு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 100 சவரன் நகைகள் மற்றும் ரூ.70,000 ரொக்கம் கொள்ளை. கண்டிகையில் உள்ள உறவினரின் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் விஜயலு சென்றிருந்தபோது கொள்ளையர்கள் கைவரிசை. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடித்தவர்களுக்கு பொதட்டூர்பேட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.