கான்பூரில் கனமழை பெய்ய 93% வாய்ப்பு: டெஸ்ட் போட்டிக்கு சிக்கல்
இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் கான்பூரில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முதல் நாளான இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய 93% வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.