3 குற்றவியல் சட்டங்கள்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு, புதுவை வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. பழைய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நியாய சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்க்ஷிய அதினியம் ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன. 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.