மதுரை ரயில் நிலையம் தற்போது உள்ளதை விட 10 மடங்கு விரிவாக்கம்
மதுரை ரயில் நிலையம் தற்போது உள்ளதை விட 10 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். மதுரை ரயில் நிலையத்தில் நாள் ஒன்றிற்கு 1 லட்சம் பயணிகளை கையாளும் விதமாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பெரியார் பேருந்து நிலையம் ரயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதை அமைந்தால் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக ரயில் நிலையத்துக்கு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.