திருச்சி-சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
திருச்சி-சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் முன்கூட்டியே புறப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட இருந்த விமானம் மதியம் 3 மணிக்கே சிங்கப்பூர் புறப்பட்டது. திருச்சியில் இருந்து முன்கூட்டியே விமானம் புறப்பட்டதால் சுமார் 20 பயணிகள் சிங்கப்பூர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால் மாற்று விமானம் ஏற்பாடு செய்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.