தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி இபிஎஸ் மனு
தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதை எதிர்த்து தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமியின் மனு ஏற்புடையது அல்ல என்று தயாநிதி தரப்பு வாதம் செய்துள்ளது