சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் பிரச்சனையை
சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 15 நாட்களுக்கும் மேலாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பணிக்கு திரும்பாவிடில் பணிநீக்கம் செய்ய நேரிடும் என ஊழியர்களுக்கு சாம்சங் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையில் சுமூக உடன்பாட்டை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என தெரிவித்தார்.