அண்ணாமலை பல்கலை.யில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா
அண்ணாமலை பல்கலை.யில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பி.லிட் பட்டம் பி.ஏ (தமிழ் இலக்கியம்) பயின்றவர்களுக்கு இணையானது அல்ல என்று 100 பேருக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது. தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 164 பேரை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. 100-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்