தினம் ஒரு சிந்தனை
வார்த்தைகளையும்,
வாய்ப்புகளையும்
சரியாகப் பயன்படுத்தினால்
வாழ்க்கை நம் வசப்படும்..!!
வீட்டு வைத்தியம்
சிறுகீரை உடலுக்கு வலிமையும், நினைவாற்றலையும் தருவதுடன் தோல் நோய்களையும் குணப்படுத்தும்.
நாளும் ஒரு செய்தி
ஆஸ்பிரின் மருந்தைக் கண்டுபிடித்தவர் ‘டிரேசர்’ ஆவார்.
சமையல் குறிப்பு
எலுமிச்சம் பழம் தோல் காய்ந்து கடினமாக இருந்தால், வெந்நீரில் சிறிது நேரம் போட்டு பின்பு எடுத்து சாறு பிழிந்தால் அதிக சாறு கிடைக்கும்.
பொன்மொழி
பேராசையுடன் பணத்தைச் சேர்ப்பவன் திருடனாகிறான், திருடனை உருவாக்குகிறான்.
-லாட்சு
இன்று செப்டம்பர் 23-
▪️ சைகை மொழிகளுக்கான பன்னாட்டு நாள்.
▪️ 1965-இல் இந்திய பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது.
பிறந்த நாள்
கி.மு 63- அகஸ்டஸ் (உரோமப் பேரரசர்)
நினைவு நாள்
1939- சிக்மண்ட் பிராய்டு (ஆஸ்திரிய மருத்துவர்)
2015- தயானந்த சரசுவதி (இந்திய ஆன்மீக குரு)