இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2ம் வாக்கு எண்ணிக்கை.
முதல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறவில்லை.
இதனால், வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்த எண்ணிக்கை நடக்க உள்ளது.
முதல் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த அநுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு விழுந்த வாக்குகள் மட்டுமே 2வது எண்ணிக்கையில் கணக்கில் எடுக்கப்படும்.
இறுதி எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.