கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ
ஒட்டன்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1500 கோழி குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியை சேர்ந்தவர் ஹர்ஷவரதன். இவர் சொந்தமாக கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் சுமார் 2000 கோழி குஞ்சுகள் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று கொட்டகையில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த கொட்டகையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிக்கியும், தீயில் கருகியும் சுமார் 1500 கோழி குஞ்சுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.