வயிற்று உப்புசத்தைப் போக்கும் எளிய வழிமுறைகள் சில …

  • சீரகத்துக்குச் செரிமான சக்தியை அதிகரிக்கும், வாயுத் தொல்லையை நீக்கும் ஆற்றலுண்டு. சாப்பிட்ட பிறகு அரை டீஸ்பூன் சீரகத்தை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கலாம்.
  • சாப்பிட்ட பிறகு ஒரு கப் புதினா டீ குடிப்பது செரிமானம் சீராக உதவும். இது பித்தநீர் சுரப்பதை மேம்படுத்தி, உணவு வேகமாக செரிமானப் பாதையில் பயணிக்க உதவும். ஆனால், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் பிரச்னை இருப்பவர்கள், இதைப் பயன்படுத்தினால் பிரச்னை இன்னும் அதிகமாகும்.
  • வயிறு புரட்டி, குமட்டல் வரும் பிரச்னையைத் தடுக்க அக்குபிரஷர் நுட்பத்தைக் கையிலெடுக்கலாம். வலது கையில் பெருவிரல், ஆள்காட்டி விரல்களால் இடது கையின் பெருவிரல், ஆள்காட்டி விரலுக்கு நடுவில் இருக்கும் மென்மையான பகுதியை அழுத்த வேண்டும். இதைச் செய்தால் குமட்டல் குறைய வாய்ப்பு உண்டு.
  • செரிமான மண்டலத்தில் 500-க்கும் அதிகமான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. குடல் ஆரோக்கியத்துக்கும் செரிமானத்துக்கும் இவை உதவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும். எனவே, நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் யோகர்ட், திரட்டுப்பால் போன்ற புரோபயோடிக் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.