மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்
மேற்குவங்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாளை பணிக்கு திரும்புவதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ஆக. 9ம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். கொல்கத்தாவில் 42 நாட்களாக நீடித்து வந்த பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.