அமெரிக்காவின் பெடரல் வங்கி 0.5% வட்டி விகிதம் குறைப்பு..!!
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை 0.5சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளது. பெடரல் வங்கி வட்டி குறைப்பினால் குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் மற்றும் கார், அடமான கடன்களுக்கான வட்டி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து பெடரல் வங்கி தற்போது வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.