2 தியேட்டர்களுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி

சென்னை: 6 ஆண்டாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள நங்கநல்லூர் வெற்றிவேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 2 திரையரங்குகளுக்கு சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் சீல் வைத்தனர். 2018-ல் இருந்து திரையரங்குகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.60 லட்சம் வரி தொகையை பாக்கி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியும் பலமுறை நேரில் சென்று கூறியும் வரி செலுத்தாததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.