உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம்
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாவிட்டால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் உள்ளதாக உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் அதிக மழை கட்டுக்கடங்காத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம் என பல்வேறு இயற்கை பேரிடர்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் உலக வானிலை ஆராய்ச்சி மையத்தின் பொது செயலாளர் செலஸ்டி சாலோ, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
javascript:false
அப்போது பேசிய அவர், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்காவிட்டால் இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது என தெரிவித்தார். உலக அளவில் கடந்த ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக இருந்தது என்றும் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களிலும் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்து இருந்ததாகவும் செலஸ்டி சாலோ தெரிவித்தார்.