டெல்லி புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 43 வயதான அதிஷியை டெல்லி முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.