ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
‘2026ல் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை’; ஒன்றிய அமைச்சராக இருப்பவருக்கு அடக்கம், பண்பு வேண்டும்:
2026ல் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை’ என ஈரோட்டில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார். தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பெரியார் நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தபடி, சமூகநீதி உறுதிமொழி ஏற்பு எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெரியாரின் புகழ் உலகெங்கும் பரப்பப்பட்டு வருகிறது. பெரியாரின் புகழை பரப்புவதில் முதல்வர் மிகவும் ஆர்வமாக உள்ளார்.