பிரதமர் நரேந்திரமோடிசெப்டம்பர் மாதம் 17ம் தேதி பிறந்தார்
பிரதமர் நரேந்திரமோடி 1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிறந்தார். வடகிழக்கு குஜராத்தில் உள்ள வாட்நகரில் பிறந்து வளர்ந்த மோதி, அங்கு இடைநிலைக் கல்வியை முடித்தார். 1978 ஆம் ஆண்டில் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த கற்றல் பள்ளியில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1983 இல், அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு அறிமுகமானார்.
மோடி 1971 இல் குசராத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியரானார். அவ்வமைப்பு அவரை 1985ல் பாஜாகவில் இணைத்தது. 2001 வரை கட்சியின் படிநிலையில் பல பதவிகளை வகித்து, பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
- குடியரசு தலைவர் முர்மு
பிரதமர் நரேந்திர மோடி உங்கள் பிறந்தநாளில் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள். உங்கள் ஆளுமை மற்றும் பணியின் வலிமையால், நீங்கள் அசாதாரணமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளீர்கள் மற்றும் நாட்டின் செழிப்பையும் மதிப்பையும் உயர்த்தியுள்ளீர்கள். தேசத்தின் உணர்வில் நீங்கள் மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகள் முதலில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வழி வகுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் வருடங்களில் நீடித்த ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
- உள்துறை அமைச்சர் அமித்ஷா
மோடி ஜி பாரம்பரியம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் ‘புதிய இந்தியா’ என்ற பார்வையுடன் இணைத்துள்ளார். தனது வலுவான மன உறுதியுடனும், பொது நலனுக்கான உறுதியுடனும், சாத்தியமற்றதாகத் தோன்றும் பல பணிகளைச் செய்து ஏழைகளின் நலனுக்காக புதிய சாதனைகளைப் படைத்துள்ளார் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மல்லிகார்ஜுன் கார்கே
பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழட்டும்.
- அன்புமணி ராமதாஸ்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று 74-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு நான் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வலிமை ஆகியவற்றுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
- குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று காலை காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.