இன்று திமுக பவள விழா, முப்பெரும் விழா.
திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.
பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களில் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.