இந்து முன்னணி அமைப்பினர் மீது வழக்குப்பதிவு
விநாயகர் சிலை ஊர்வலம் : விதி மீறலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது வழக்குப்பதிவு
விநாயகர் சிலை ஊர்வலத்தில் விதி மீறலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை வழியாக நேற்று விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு ஊர்வலமாக கொண்டு சென்றபோது போலீசார் அனுமதிக்கப்பட வழியில் செல்லாமல், அப்பகுதியில் உள்ள பெரிய மசூதி தெரு வழியாக செல்ல முற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் 61 பேர் மீது ஜாம் பஜார் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.