மிலாது நபி, தொடர் விடுமுறையால் ஏற்காட்டில்
மிலாது நபி, தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் பூங்கா, படகு இல்லத்தில் பொழுதை கழித்து மகிழ்ந்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதுமாக குளுமையான, இயற்கை பசுமை நிறைந்த பகுதியாக ஏற்காடு இருப்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
மிலாடி நபி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, குகை கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி, காட்சி முனை பகுதிகள் மற்றும் படகு இல்லத்தில் குடும்பத்துடன் கூடி பொழுது போக்கினர். படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால், ஏற்காட்டில் உள்ள தங்கு விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. ஓட்டல்கள், சாலையோர கடைகள், தற்காலிக ஸ்நாக்ஸ் கடைகளில் வியாபாரம் கலைகட்டியது. ஏற்காடு மலைப்பாதையில் உள்ள திடீர் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். ஏற்காட்டின் அனை த்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்