டான்ஜெட்கோ உத்தரவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு 79 பேரை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டான்ஜெட்கோ பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. டான்ஜெட்கோ நிறுவனம் இரண்டாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என உருவாக்கப்பட்டது. பசுமை எரிசக்தி கழகத்துக்கு அதிகாரிகள், ஊழியர்களை இடமாற்றம் செய்ய கடந்த பிப். 12-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் 79 பேரை இடமாற்றம் செய்து கடந்த ஜூன் 29-ம் தேதி டான்ஜெட்கோ உத்தரவிட்டது. டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்து மின்வாரிய கணக்காயர், களத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.